si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு சேவைகள்
குறித்தொதுக்கப்பட்ட அதிகாரசபை (DNA)

DNA இலங்கையில் CDM கருத்திட்டங்களின் நிறுவனங்கள் பங்குபற்றுகையை அங்கீகரித்து அறிக்கையிடுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள அமைப்பே DNA ஆகும். DNA யின் பிரதான தொழிற்பாடாக உள்ளது என்னவெனில் CDM கருத்திட்டங்கள், இலங்கையில் அதனுடைய நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை சாதிப்பதில் உதவி செய்யக்கூடியனவா எனத் தீர்மானிப்பதற்கு அவற்றின் இயலுமைகளை மதிப்பீடு செய்வதுடன் CDM கருத்திட்டங்களின் கருத்திட்ட பங்குபற்றுனர்களுக்கு அங்கீகாரக் கடிதங்களை வழங்குவதுமாகும். இது தொடர்பாக DNA ஆனது பின்வரும் விடயங்களில் பேச்சுக்களை நடாத்தும்.

  1. CDM கருத்திட்டங்களின் மதிப்பீடும் அங்கீகரிப்பும்,
  2. இயலுமை அபிவிருத்தி எதிர் CDM கருத்திட்ட அபிவிருத்தி
  3. CDM சந்தை. இச் செயற்பணிகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. மதிப்பீடும் அங்கீகாரமும்
    1. சர்வதேச அளவுகோல்களைக் கைக்கொள்ளுதல்
    2. தேசிய அளவுகோல்களை விருத்தி செய்தல்
    3. CDM கருத்திட்ட அபிவிருத்திக்கான வழிகாட்டுதல்களை நிறுவுதல்
    4. CDM கருத்திட்டங்களி்ன் மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்புக்கான செயன்முறைகளை நிறுவுதல்

  2. CDM கருத்திட்ட அபிவிருத்திகளுக்கான இயலுமை அபிவிருத்தி
    1. அடையாளம் கண்டு கருத்திட்டங்களை உருவாக்குதல்
    2. அடிக்கோட்டை நிறுவிக்கொள்ளுதல்
    3. வெளியேறல் குறைப்பை வெளிப்படுத்தல்
    4.  
    5. கருத்திட்டங்களின் செயற்பாட்டைக் கண்காணித்தல்

  3. CDM சந்தை ஊக்குவிப்பு
    1. நம்பத்தகுந்த தரவுகளையும் தகவல்களையும் கொண்டுள்ள தொகுதித் தலைப்புக்களை விருத்தி செய்தல்
    2. அடையாளம் காணுதல், CDM கருத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் விருத்தி செய்தல் இலங்கையில் CDM கருத்திட்டங்களையும் அக் கருத்திட்டங்களின் அடிக்கோடுகளையும் இனங்காணுதல், உருவாக்குதல் மற்றும் விருத்தி செய்தலுக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்குதல்
    3. காபன் சந்தை தகவல்களை வழங்குதல்
    4. உயர்ந்தபட்ச அளவுடன் கூடிய செலவு குறைந்த CER இன் உருவாக்கத்திற்கு ஆதரவு அளித்தல்


 

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012 16:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது