|
இதன்படி இலங்கை சுற்றாடல் அமைச்சானது ஒவ்வொரு வருடமும் தீவு பூராகவும் நவம்பர் 15ஆம் திகதியில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கான படிநிலைகளை முனைப்பாக்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சானது அலுவலக வளாகங்கள் வீதியோரங்கள், ஆற்றங்கரைகள், தரம் குறையும் நிலங்கள் நீர்வழியோரங்கள், சாய்வுக்காணிகள், மரங்களற்ற மரம் நாட்டலுக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்களாக பொருத்தமானவைகளாக இனம்காணப்பட்டன. இதற்கு மேலதிகமாக இது சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஒழுங்குசெய்ய எண்ணியுள்ளதுடன், மண்பாதுகாப்பு கருத்திட்டங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புடன் தொடர்புடைய பல்வேறுபட்ட பணிகளையும் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமாந்தரமாக மாவட்ட, பிரதேச, கிராமமட்டங்களில் நடாத்த உள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு குறித்து எதிர்கால தலைமுறையினரிடையே மனோபாவங்களை முன்னேற்றும் நோக்குடன் பாடசாலை சனசமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பங்குபற்றச் செய்வதற்கு இது எதிர்பார்க்கிறது,
“Deyata Sevana மரம் நாட்டல் 2011 தேசிய வைபவமானது நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறப்பு மிகு பங்குபற்றுகையுடன் இலங்கை “Green Park”, பத்தரமுல்லையில் 2011 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கெளரவ அமைச்சரவை அமைச்சர்கள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர் அரசியல் அதிகாரிகள், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இத்தேசிய நிகழ்வில் மரம் நடுகைக்கு பங்களிப்புச் செய்தனர்.
‘Deyata Sevana’ மரம் நாட்டல் நிகழ்ச்சித்திட்டமானது நீடித்த அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாக அமைவதால் நடப்பட்ட மரங்களை தொடரப்படுவதும் அவைகள் குறித்த பதிவுகைளப் பேணுவதும் மேலும் முக்கியமானதாக உள்ளது, இது நாட்டின் தேசிய இலக்குகளை சாதித்துக்கொள்வதில் இந்நிகழ்ச்சித்திட்டத்தால் வழங்கப்பட்ட பங்களிப்பின் மதிப்பீடு செய்யும் தேவையை இலகுவாக்கும். 2010 ஆமு் ஆண்டு நாட்டப்பட்ட மரங்களில் 2,100,000 மேற்பட்ட மரங்கள் தப்பியிருப்பதாக அறிக்கையிடப்பட்டிருப்பதானது இவ் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியை சுட்டிக்காட்டுகிறது. இவ்வருடத்திற்கான அறிக்கை ஆனது இன்னும் சுற்றாடல் அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் நாட்டப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணி்க்கை 1,700,000 யைத் தாண்டும் என்பது வெளிப்படையானது. .
மேலதிக விபரங்களுக்கு இங்கே சுடுக்குக.....
|