si_uni  ta_uni
SinhalaEnglish



நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
Status of Biosafety Education, Training and Capacity Building in Sri Lanka There are no translations available. An Expert Consultation process was conducted by the Biodiversity secretariaton 27th March 2012,at Hot... மேலும் வாசிக்க
Calling for Expression of Interest (EOI) - 2012 The National Green Reporting System of Sri Lanka There are no translations available. Introduction:   Nationally appropriate frameworks are necessary to promote the innovation in ... மேலும் வாசிக்க
A Greener Country A Brighter Future There are no translations available. Deyata Sevana National Tree Planting Programme 2012   Inauguration ceremony will commence on ... மேலும் வாசிக்க
முகப்பு எங்களைப்பற்றி
எம்மைப்பற்றி

எமது நோக்கு :


"உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு உயர்மட்ட எதிர் விளைவு காட்டுவதுடன் கூடிய ஒரு சுற்றாடல் உணர்வுள்ள தேசியமும் ஒரு வளமுள்ள இலங்கையும். "

எமது பணி :


"காலநிலை மாற்றத்தோடு போராடுவதில் உள்ளுர் பிராந்திய, உலகளாவிய ரீதியான முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்வதற்கான அனைத்துமடங்கிய செயற்பாட்டை எடுப்பதற்கு நாட்டை வழிநடத்துவதும் தவிர்க்க முடியாத காலநிலை மாற்ற காட்சிகளை தேசிய நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதும்."

 

 

காலநிலை மாற்றத்தால் விளைவிக்கப்படும்  பெரிய சுற்றாடல் சவால்களின் ஒரு குறுக்குவெட்ட இயல்புகளை தீர்க்கும் முகமாகவும் காலநிலை மாற்றம் மீதான ஐக்கியநாடுகள் சட்டக அமைப்பு சமவாயம்  (UNFCCC) மற்றும்  Kyoto மரபொழுங்கின் கீழுமான அர்ப்பணிப்புக்களை நிறைவேற்றுவதுமாகும். (UNFCCC) மற்றும்  Kyoto மரபொழுங்கிற்கான தேசிய குவியப்புள்ளியாகிய சுற்றாடல் அமைச்சானது அதனுடைய பார்வையின் கீழ் காலநிலை மாற்ற செயலகம் ஒன்றை நிறுவுவதற்கான முனைப்புக்களை எடுத்துள்ளது..
காலநிலை மாற்றப் பணிப்பாளரால் தலைமைதாங்கி நடாத்தப்படும் காலநிலை மாற்றச் செயலகமானது காலநிலை மாற்ற சவால்களானவை ஒரு சுற்றாடல் பிரச்சினையாக வகைப்படுத்தப்பட்டு இலங்கைக்கான அபிவிருத்திப்பிரச்சினையாக உள்ளமையால் அதற்கு தீர்வு காண்பதற்கான அனைத்துமடங்கிய ஒரு தேசிய அணுகுமுறையை கைக்கொள்கிறது.

காலநிலை மாறற்ச் செயலகத்தின் இலக்குகள்
தேசிய மட்டத்திலே காலநிலை மாற்றப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதனை அபிவிருத்திச் செயன்முறைக்குள் கூட்டிணைப்பதற்காக ஒரு காரண காரிய மேடையை வழங்குவதாகும்.

காலநிலை மாற்றச் செயன்முறைகளை பொறுப்பெடுப்பதற்கும் உரிய கொள்கைகள் நிகழ்ச்சித்திட்டங்களின் விருத்தி செய்தல் உட்பட்டனவற்றுக்குமான அர்ப்பணிக்கப்பட்ட நிறுவன பொறிமுறையின் வடிவமாக தொழிற்படுதல்.

காலநிலை மாற்றம் மீதான தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு ................. முன்னுரிமைகளை இனங்கண்டு பொறிமுறைகளை விருத்தி செய்வதற்கு தேசிய மற்றும் உபதேசிய மட்டங்களில் பிரிவு முகவர்களை ஒருங்கிணைத்தல்

கொள்கை மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை தூண்டிவிடுவதற்காக காலநிலை மாற்றம் தொடர்புடைய ஆய்வுகளை பொறுப்பெடுக்க மற்றும் ஆய்வு முடிவுகளை விநியோகிப்பதற்கு பொறுப்பெடுக்க வசதிப்படுத்தல்

காலநிலை மாற்றத்தின் தேசிய பதிற் செயற்பாட்டின் தாக்கங்களைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையை நிறுவுதல்.

UNFCCC, செயலகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், COP மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டங்களில் இலங்கையின் பங்குபற்றுதலுடன் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரிப்பதற்கு பொறுப்பாக இருத்தல்  .

CDM கருத்திட்டங்களை அங்கீகரிப்பதற்காக குறித்தொதுக்கப்பட்ட (DNA) தேசிய அதிகாரசபைக்கான   செயலகமாக சேவையாற்றுதல்.

காலநிலை மாற்றம் மீதான தேசிய மதியுரைக்குழு (NACCC) :
பரந்தளவிலான உள்ளீடுகளின் மூலம் சிறந்த தீர்மானங்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறுபட்ட கருத்து நோக்குகளை ஒருங்கிணைப்பதற்காகவும் முக்கிய செயற்பாட்டாளர்களை ஒன்றாகக் கொண்டு வருவதற்காகவும் காலநிலை மாற்றம் மீதான தேசிய மதியுரைக்குழு NACCC MENR இன் கீழ்உருவாக்கப்பட்டதுடன் காலநிலைமாற்றம் தொடர்பான எல்லா செயற்பாடுகளும் அதனால் ஒருங்கிணைக்கப்படும்.

 

NACCCயின் இலக்குகள்

காலநிலை மாற்றக் கொள்கைகளும் நிகழ்ச்சித்திட்டங்களும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளோடு ஒத்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்துதல்.

காலநிலை மாற்றப் பிரச்சினைகளை தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலின் சூழமைவில் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு சபையாக தொழிற்படுவதும், காலநிலை மாற்ற தொடர்பான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளின் அபிவிருத்தியில் ஒரு கலந்தாலோசனை சபையாக தொழிற்படுகிறது. ஆய்வாளர்களால் பொறுப்பெடுக்கப்படும் தணித்தல் தாக்கங்கள் மற்றும் கைக்கொள்ளுதல் மீதான ஆய்வு விடயங்களை சிபார்சு செய்வதும் தூய அபிவிருத்தி பொறிமுறை (CDM) கருத்திட்டத்தில் தனியார் துறை பங்குபற்றுகையை ஊக்குவிப்பதும்.

 

NACCC யின் பொறுப்புக்களாக பின்வருவன உள்ளடங்கும்:

காலநிலை மாற்றம் மீதான தேசிய தொடர்பாடல் மீதான தயார்ப்படுத்துகைக்காக ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவதுடன் பச்சை வீட்டு வாயுக்களின் பட்டியல் சக்தி உருவாக்கம், விவசாயம், காடு மற்றும் காணிப்பாவனை மாற்றம்,கழிவு முகாமைத்துவம், அத்துடன் நடந்துகொண்டிருக்கும் இரண்டாவது தேசிய தொடர்பாடல் தயார்படுத்தல் செயன்முறை போன்ற மனிதன் மாசடையச் செய்யும் செயற்பாடுகளில் இருந்து வெளிப்படுத்துபவைகள் என்பன அனைத்தும் உட்பட .;

பச்சை வீட்டு வாயுக்கள் வெளிப்படுத்தப்படுபவைகளைத் தணிக்கும் மற்றும் எல்லாப் பச்சை வீட்டு வாயுக்களினதும் தாழ்ப்புக்களையும், தேக்கங்களையும் அங்கீகரிக்கும் கொள்கைகளும் தந்திரோபாயங்களும் உருவாக்கப்படுதலுக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

முக்கிய சமூக பொருளாதாரத் துறைகள் மீதான காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்கான பதிற்செயற்பாட்டு தந்திரோபாயங்கள் மற்றும் கைக்கொள்ளல் தந்திரோபாயங்களுக்கான கொள்கைத் தெரிவுகளை வழங்குதல்;

காலநிலை மாற்றங்களின் பாதிப்பான தாக்கங்களுக்கு கைக்கொள்வதற்கான ஆலோசனையில் வழங்கப்பட்ட கொள்கைகள் மற்றும் தந்திரோபாயங்கள், திட்டங்கள் மீதானசிபார்சுகளை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய விடயங்களின் முகாமைத்துவம் பாதுகாப்பு, மற்றும் புனர்வாழ்வுக்காக காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மீதான பொருத்தமான இயலுமையைக் கட்டியெழுப்புதல் ஆய்வுக்கற்கைகள் என்பன உள்ளடங்குதலாக;

UNFCCC யின் COP யின் கூட்டங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்காக பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளையும் தந்திரோபாயங்களையும் விருத்திசெய்வதற்கு வசதிப்படுத்துதல்;

விஞ்ஞான தொழில்நுட்ப மின்னியல் சமூக பொருளாதார மற்றும் ஏனைய ஆய்வுகளில் முன்னேற்றுவதற்கும் ஒத்துழைப்பதற்கும் வழிகாட்டுதல்களை வழங்குவதும், காலநிலை முறைமை தொடர்புடைய தரவு சுவடிக்கூடங்களின் முறைமை ரீதியான அவதானிப்பும் அபிவிருத்தியும் மற்றும் எல்லா பங்காண்மையாளர்களிடையேயும் வலைப்பின்னலையும் தகவல்களையும் பரிமாறுவதையும் பகிர்ந்துகொள்வதையும் அதிகரிக்கச் செய்வதும்;

இரண்டாவது தேசிய தொடர்பாடல் (SNC), யினை உருவாக்குவதற்கு மதியுரை செய்தல், தொழில்நுட்ப செயற்குழுவின் சிபார்சுகள் தீர்மானங்கள் உட்பட தூய அபிவிருத்தி பொறிமுறை செயன்முறையின் செயற்பாடுகளின் மீள்பார்வையிலும் மதியுரை அளித்தல்.;

நிகழ்ச்சித்திட்டங்களையும் தந்திரோபாயங்களையும் பொதுமக்களிலிருந்தான உறுப்பினர்களின் o பரந்தளவான பங்களிப்பு ஊடாக பச்சை வீடுகளின் வாயு வெளியேற்ற மட்டத்தைக் குறைப்பதற்கு விழிப்புணர்வை ஊக்குவித்து செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு தந்திரோபாயங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் கொண்டிருத்தல். 
இலங்கை காபன் நிதியம் (SLCF) லிமிற்றட்
SLCF ஆனது 09.04.2008 அன்று ஒரு கம்பனியாக 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஒரு அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது. (பதிவு இலக்கம். PV63181) இது ஒரு அரசுக்குச் சொந்தமான தனியார் கம்பனியாக இருப்பதுடன், அரசாங்கமானது பங்கின் 51% ஆகிய பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ளது. மிகுதியான பங்குமூலதனமானது தனியார்துறை உட்பட்ட வேறு பல மூலங்களிலிருந்து திரட்டப்படுகிறது.

விபரக்கொத்தை பதிவிறக்கம் செய்யவும்.

[Page 1] [Page 2]

SLCF இன் இலக்குகள் பின்வருமாறு:

1. கருத்திட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக CDM கருத்திட்ட விருத்தி செய்வோருக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகளை வழங்குதலும்
2. சிறிய CDM கருத்திட்டங்களை ஒன்றுகூடிக் கட்டுவதற்கு வசதி செய்தல்.
3. வர்த்தகர்கள் ஊடாக CDM கருத்திட்டங்களுக்கான மூலதன நிதியீட்டத்தை கிடைக்கச் செய்வதற்கு வசதியளித்தல் .
4. CDM கருத்திட்டங்களுக்கு மூலதன முதலீட்டை வழங்குதல்
5. காபன் வரவுகளுக்காக கொள்வனவு செய்தல் மற்றும் பிற்பட்ட விற்பனை ஊடாக காபன் வர்த்தகத்தில் ஈடுபடுதல்

கருப்பொருள் விடயங்கள் :

புதுப்பிக்கக்கூடிய சக்திகளாகிய (நீர்சக்தி, காற்றுச் சக்தி, சூரிய சக்தி, உயிரியல் சக்தி உருவாக்கம்) போன்ற துறைகளில் வெளிவிடுகைகளைக்  குறைப்பதற்கு SLCF யினால் உதவியளிக்க முடியும்.
சக்தி பாதுகாப்பு
நீடித்து நிலைக்கக்கூடிய பாதுகாப்பு
கைத்தொழில்
முகாமைத்துவம்
மாநகரசபைl / திண்மக்கழிவு
காடுவளர்த்தல், மரம் வளர்த்தல்

சுத்தமான அபிவிருத்தி பொறிமுறை (CDM)க்கான சந்தர்ப்பங்கள்

சுத்தமான அபிவிருத்தி பொறிமுறை (CDM) எனப்படுவது Kyoto மரபொழுங்கின் 12 ஆம் உறுப்புரையின் கீழ் மறுக்கப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை சாதிப்பதில் பின்னிணைப்பில் 1 இல் உள்ளடக்கப்பட்டுள்ளவற்றுக்கு உள்ளக்கப்படாதவற்றுக்கு CDM  உள்ளடக்கப்படாத தரப்புக்களுக்கு CDM உதவியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. CDM  ஆனது Kyoto மரபொழுங்கின் கீழ் தமது அளவு குறித்து சொல்லப்பட்ட வெளியிடுதல்களை  வரையறுத்தல் குறைக்கும் அர்ப்பணிப்புக்களுடன்  ஒத்துச்செல்வதை சாதிப்பதில் இணைப்பு 1 தரப்புக்களுக்கு உதவியளிக்கும். மேலதிக தகவல்களுக்கு [www.climatechange.lk/DNA] க்குச் செல்லவும்


தரவுக்குறிப்பை பதிவிறக்கம் செய்வதற்கு [பக்கம் 1] [பக்கம் 2]

வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013 14:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது