si_uni  ta_uni
SinhalaEnglish
கௌரவ பிரதியமைச்சரின் செய்தி 

இலங்கை தாய்நாட்டின் சுற்றாடலின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்தவத்திற்கான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்க சுற்றாடல் அமைச்சுக்குப் பொறுப்பு கொடுத்துள்ளது. அதற்கு மேலதிகமாக எமது அமைச்சானது பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளான காலநிலை மாற்றம், உயிரியல் பிரிவு, நிலம் தரம் குறைதல், கழிவு முகாமைத்துவம், மற்றும் ஏனைய சுற்றாடல் பிரச்சினைகள் மீதான எமது உலகளாவிய அர்ப்பணிப்புக்களை பூர்த்தி செய்வதற்கான கொள்கைகளை அமுல்படுத்துவதும் அமைச்சிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

இவ் இலக்குகளை சாதிக்கும் பொருட்டு “மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கு”  தேசிய அபிவிருத்திச் சட்டக வேலையுடன் எமது அமைச்சானது பல கொள்கைகளை தந்திரோபாயங்களையும் செயற்திட்டங்களையும் தயாரித்துள்ளது. இந் நிகழ்ச்சித்திட்டங்களானவை அமைச்சாலும் அதன் கீழ்வரும் முகவர்களாலும் தொடர்புடைய பங்காண்மை முகவர்களின் பங்காற்றுகையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இம் முயற்சியானது அமைச்சால் மேற்படி இலக்குகளை ஈட்டிக்கொள்வதிலும் பொதுமக்களுக்கும் வெளியே உள்ளோருக்கும் தகவல்களை பரப்பிக்கொள்வதிலும் அமைச்சானது மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றத்தை படம்பிடித்துக்காட்டுகிறது. ஒரு சிறந்த சுற்றாடலுக்குத் தேவைப்படும்பொழுது தேவைப்படும் சரியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக எமது செயற்பாடுகள் மீது உங்களின் பெறுமதியான பின்னூட்டல்களை நாம் பாராட்டி வரவேற்கிறோம்.

A R M அப்துல் காதர் பாராளுமன்ற உறுப்பினர்.
சுற்றாடல் பிரதியமைச்சர்

  • தொடர்புகள் : 011-2123456
வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது